
பெங்களூர் : ஆகஸ்ட் . 11 – காதலித்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து 26 லட்சம் ரூபாய் பெற்று பின்னர் வேறொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளாள் என இளம் பெண் ஒருவரூக்கு எதிராக கிரிக்கெட் வீரர் கீர்த்தி ராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் யமுனா என்ற இளம் பெண் இவருக்கு அறிமுகமாகியுள்ளாள் . இந்த அறிமுகம் பின்னர் காதலாக மாறியுள்ளது . பின்னர் இதுவே திருமணம் வரை சென்றுள்ளது . நான் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் திருமண செலவை நீங்களே ஏற்க வேண்டும் என யமுனா கூறியுள்ளார் .
எப்படியோ திருமணம் நடக்க போகிறது என்ற நம்பிக்கையில் தவணை முறையில் யமுனாவிற்கு 26 லட்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில நாடகளுக்கு பின்னர் தான் கொடுத்த பணத்தை வைத்தே நாகேந்திரா என்பவரை யமுனா திருமணம் செய்து கொண்டுள்ளாள் . இந்த தகவல் அறிந்து யமுனாவிடம் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்ட போது அது ஒரு பெரிய கதை . உங்கள் பணத்தை திருப்பி தருகிறேன் என யமுனா ஏமாற்றிக்கொண்டே வந்துள்ளாள் . பின்னர் மீண்டும் என் பணத்தை கேட்க யமுனாவிடம் சென்றபோது யமுனா , நாகேந்திரா மற்றும் அவளுடைய தம்பி என மூன்று என்னை தாக்கினர்.
என்னுடைய காரையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் யமுனா ஆம் உங்கள் பணத்தில் தான் திருமணம் செய்து கொண்டேன். என்ன செய்வாயோ செய்துகொள் எனவும் மிரட்டியுள்ளாள் . என கீர்த்திராஜ் பைடராயணபுரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துகொண்டுள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்