திருமண வலைதளத்தில் அறிமுகமானபெண்ணுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த நபர் கைது

பெங்களூர் : நவம்பர். 22 – திருமண வலைதளத்தில் அருகமான பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து அவளுடைய அந்தரங்க புகைப்படங்களை பெற்று பின்னர் அவரை நிர்வாண வீடியோ அழைப்பு விடுக்குமாறு மிரட்டி 1.50 லட்ச ரூபாய்கள் மோசடி செய்தவனை கைது செய்ய நகரின் மேற்கு பிரிவு சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். நாகரபாவியில் வசித்து வரும் 41 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தள்ளூரி அரவிந்த் சொத்திரி (44) என்பவனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவனை கைது செய்யும் முயற்சிகளில் உள்ளனர். புகார் அளித்த பெண்மணி திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தன்னுடைய புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண வலைதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் குற்றவாளி அரவிந்த் சவுத்திரி இவரை தொடர்பு கொண்டு தான் இவரை திருமணம் செய்துகொளவதாக நம்பவைத்துள்ளான். இவனுடைய வார்த்தையில் மயங்கிய பெனம்ணி தன்னுடைய முழு விவரங்களை அவனிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். பின்னர் குற்றவாளி பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை கேட்டு பெற்றுள்ளான் . பின்னர் முகநூல் , இன்ஸ்டராகிராம் மற்றும் ஜி மெயில்களை ஹேக் செய்துள்ளான். பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்ட குற்றவாளி பெண்ணை நிர்வாண வீடியோ கால் செய்யமாறு மிரட்டியுள்ளான் . இல்லையெனில் தனக்கு பணம் தருமாறும் மிரட்டியுள்ளார். தவறினால் பெண்ணின் அந்தரங்க படங்களை அவளுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதனால் கலவரமடைந்த பெண் தவணை தவணையாக அவனுக்கு 1.50 லட்ச ரூபாய்களை அனுப்பிவைத்துள்ளார். ஆனாலும் திருப்தி அடையாத குற்றவாளி பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை பெண்ணின் உறவினர்கள் மற்றும் நன்பர்களின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பிவைத்துளான். இதனால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான பெண் தற்போது சைபர் குற்ற போலீசில் புகார் அளித்திருக்கும் நிலையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.