திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை, செப். 9- திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.23 மணிக்கு தொடங்குகிறது.
இது நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.35 மணியளவில் நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.