
திருவண்ணாமலை:நவம்பர் , 16 – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபத்திற்கு 7,500 பேர் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நாளை கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்க உள்ளது. 26ஆம் தேதி கார்த்திகை தீபத்தின் போது விஐபி பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை என்றும் கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளைய தினம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை
கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. கொடியேற்றத்திற்கு
முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும். அதன்படி செவ்வாய்கிழமை இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்றிரவு புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். இன்றைய தினம் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார்.