திருவோண திருநாளில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகம்

திருவனந்தபுரம், செப்.7- கேரளாவில் திருவோண பண்டிகை சிங்கம் மாதத்தில், அதாவது தமிழில் ஆவணி மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும். அன்று முதல் திருவோணம் வரை 10 நாட்கள் இத்திருவிழா கொண்டாடப்படும்.
2-ம் நாள் சித்திரை, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள் அனுஷம், 6-ம் நாள் திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம் திருவிழாக்களாக கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவார்கள்.
முதல் நாளில் ஒரே விதமான பூக்களாலும், 2-ம் நாளில் 2 வித பூக்களாலும் பூக்கோலமிடும் அவர்கள் 10-ம் நாளான திருவோணம் அன்று 10 விதமான பூக்களால் கோலமிடுவார்கள். இது பார்க்கவே மனதை மயக்குவதாகவும், கொள்ளை அழகுடனும் இருக்கும். ஓணப்பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் ஊருக்கு வந்து மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.
இதனால் உற்சாகமின்றி நடந்த ஓணப்பண்டிகை இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளா முழுவதும் உற்சாகம் களைகட்டி காணப்படுகிறது.

கேரளாவின் எல்லையையொட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தக்கலை, குழித்துறை, குலசேகரம், திருவட்டார், களியக்காவிளை, மார்த்தாண்டம் என மேற்கு மாவட்ட பகுதிகள் முழுவதும் ஓணக்கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.