திரைப்பட வர்த்தக சபைக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர் : ஆகஸ்ட். 4 – ஊழியர்களின் சம்பளத்திற்கு பணத்தை பயன் படுத்துவதை விடுத்து வேறு எந்த விஷயத்திற்க்காகவும் பணத்தை செலவழிக்க கூடாதென்றும் தவிர எந்த பெரிய விழாக்களையும் நடத்தக்கூடாதென்றும் மாநில திரைப்பட வர்த்தக சங்கத்திற்கு உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட வர்த்தகசபை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்காக நடத்த பட்ட தேர்தல் சுமுகமாக நடைபெற வில்லை. தவிர இந்த தேர்தல்கள் குறித்து தேவையான தகவல்களை தெரிவிக்கும்படி வர்த்தக சபையின் நிர்வாகிகள் தெரிவித்திருப்பினும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ள சா ரா கோவிந்து தலைமையிலான குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சா ரா கோவிந்த் மற்றும் ஜெயசிம்மா முசூரி இந்தத்தேர்தல்கள் தொடர்பாக விளக்கங்கள் அளித்தனர்.