திரௌபதி-சின்ஹா ​​யார் ஜனாதிபதி

புதுடெல்லி ஜூலை 18

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்று நாடு முழுவதும் நடந்தது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஓட்டு போட்டனர் இந்த தேர்தலில் பிஜேபி சார்பில்  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக எஸ்வந்த் சின்கா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, எம்.எல்.ஏக்கள் ஓட்டு போடுகின்றனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின்னர் மற்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர்.

https://www.maalaimalar.com/news/national/voting-begins-for-the-presidential-election-487425
https://www.maalaimalar.com/news/national/voting-begins-for-the-presidential-election-487425