தி.மு.க. அரசின் திட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

மதுரை: செப்டம்பர் 6- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இது எங்களுக்கு சாதகமாக அமையுமா? என்பது நீதிபதி தீர்ப்பில் தான் உள்ளது. விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் வீடு பராமரிப்பின்றி இருப்பது கவலை அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அரசு கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டம் நீடூழி வாழ்க. இவ்வாறு அவர் கூறினார்.