
பெங்களூர் : நவம்பர். 15 – தீபங்களின் ஆவளி தீபாவளிப்பண்டிகையின் போது கடந்த மூன்று நாட்களில் நகரில் பட்டாசு விபத்தால் 60க்கும் மேற்பட்டோருக்கு கண்கள் பாதிப்புக்குள்ளகியுள்ள நிலையில் தவிர 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளன . இவர்களின் கை கால் மற்றும் முகங்களில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் வாழ்வில் ஒளியை தரவேண்டிய தீபாவளி திருநாளில் சிலருடைய வாழ்க்கையில் இந்த தீபாவளி இருளை தந்துள்ளது. கடந்த நவம்பர் 12 முதல் துவங்கிய தீபாவளி பண்டிகையின் போது பல்வேறு மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்ட பட்டாசு காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மிண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று பேர் பலத்த காயங்களுடன் அவதிப்பட்டுவரும் நிலையில் இவர்களின் ஒரு கண் பார்வை சீரழியும் நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீராமபுரத்தில் 18 வயது இளைஞன் , மிண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அவனுடைய கண்கள் பகுதியில் மிகவும் பாதிப்புகள் ஏற்படுவது. இதே போல் தர்மாவரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி மற்றும் நகரை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் கண் பகுதிகளில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பினும் நவம்பர் 12 மாலை வரை மிண்டோ மருத்துவமனையில் ஒன்பது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதுடன் நவம்பர் 12 அன்று பீகாரை சேர்ந்த ஆறு வயது சிறுவனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை தலைவர் ரோஹித் ஷெட்டி கூறுகையில் தங்கள் குழந்தை பார்வை ழந்துவிடக்கூடும் என்ற ஆதங்கத்தில் இவனுடைய குடும்பத்தார் உடனே ரயிலில் பெங்களூருக்கு வந்திருப்பதுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்கள் தங்கள் சரக்குகளுடன் ரயில் நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். . நாராயணா மருத்துவமனையில் இந்தாண்டு 24 புகாரகள் பதிவாகியுள்ளன.
மற்றும் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் அகர்வால் மருத்துவமனைகளில் 28 மற்றும் மூன்று புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த மருத்துவமனைகளில் உள்ள 24 புகார்களில் 13 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதுடன் இதில் 90 சதவிகிதத்தினர் பட்டாசு சுடுவதை பாத்ததிலேயே காயங்களடைந்துள்ளனர். இதில் மூன்று வயது குழந்தை உட்பட ஆறு குழந்தைகள் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
தவிரசாலையில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது எங்கிருந்தோ வந்து விழுந்த பட்டாசு சுட்டதில் அவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக முனைவர் ஷெட்டி தெரிவித்தார்.