தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை..! தெலுங்கானா நெசவாளர் சாதனை

ஐதராபாத், ஜன. 12- தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில், தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த நல்லா விஜய் என்ற கைத்தறி நெசவாளர் இந்த சேலையை நெய்துள்ளார். இதை அவர் தெலுங்கானா மந்திரிகள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று காட்சிபடுத்தினார்.
இந்த சேலையை நல்லா விஜய் மந்திரி சபிதா ரெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார். தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் இந்த சேலையை கைகளால் நெய்வதற்கு 6 நாட்கள் ஆனதாகவும் இயந்திரத்தால் நெய்யும் போது 2 நாட்களில் நெய்துவிடலாம் என்றும் நல்லா விஜய் தெரிவித்துள்ளார்.