தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: ட்ரம்புக்கு மோடி அழைப்பு

புதுடெல்லி: அக், 23-
தீ​பாவளி பண்​டிகை வாழ்த்​துகளை தெரி​வித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு பிரதமர் நரேந்​திர மோடி நன்றி தெரி​வித்​தார்.
தீபாவளி பண்​டிகை​யையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசி​யில் தீபாவளி வாழ்த்​துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது:
அதிபர் ட்ரம்ப், உங்​கள் தொலைபேசி அழைப்பு மற்​றும் அன்​பான தீபாவளி வாழ்த்​துகளுக்கு நன்​றி. இந்த தீபத் திரு​நாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடு​களும் நம்​பிக்​கை​யுடன் உலகை ஒளிரச் செய்வதுடன், தீவிர​வாதத்தை அதன் அனைத்து வடிவங்​களி​லும் எதிர்த்து ஒற்​றுமை​யாக நிற்​கட்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.வர்த்​தகம், வரி​வி​திப்​பு, எச்​1பி விசா, ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் கொள்​முதல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் தொடர்​பாக அமெரிக்க – இந்​தியா உறவு மோச​மான நிலையை அடைந்​துள்ள நேரத்​தில், இரு தலை​வர்​களுக்​கும் இடையி​லான இந்த பேச்சு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக மாறி​யுள்​ளது.
முன்​ன​தாக, அக்​டோபர் 21-ம் தேதி பிரதமர் மோடி​யுடன் பேசிய பின்​னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில், ‘நாங்​கள் நிறைய விஷ​யங்​களைப் பற்றி பேசினோம், பெரும்​பாலும் வர்த்தக உலகம் பற்றி பேசினோம்.
அவர் ரஷ்​யா​விட​மிருந்து இனி அதி​கம் எண்​ணெய் வாங்​கப் போவ​தில்​லை. என்​னைப் போலவே அந்​தப் போர் முடிவடைவதையே அவரும் விரும்​பு​கிறார்’ என்று தெரி​வித்​திருந்​தார்.
தீபாவளி பண்​டிகை​யையொட்டி வாஷிங்​டனிலுள்ள வெள்ளை மாளி​கை​யில் சிறப்பு தீபாவளி நிகழ்ச்​சிக்கு அதிபர் ட்ரம்ப் ஏற்​பாடு செய்​திருந்​தார்.
அங்கு வைக்​கப்​பட்​டிருந்த விளக்​கையேற்றி வைத்து அவர் தீபாவளியைக் கொண்​டாடி​னார்.
இந்த நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இந்​தி​யத் தூதர் வினய் குவத்​ரா, எப்​பிஐ தலை​வர் காஷ் படேல், உளவுத்​துறை தலை​வர் துள்சி கப்​பார்ட், இந்​தி​யா​வுக்​கான அமெரிக்​கத் தூதர் செர்​ஜியோ கோர், இந்​திய, அமெரிக்​க தொழில​திபர்​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.