தீவிரவாதிகளிடம் விசாரணை

பெங்களூர்: செப்டம்பர். 21 – மலைநாடு பகுதி மக்களை அதிர வைத்துள்ள தீவிரவாதிகளின் கைது விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் நடத்திவந்த தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து கண்டு பிடிப்பதில் மும்முரமாயுள்ளனர். சிவமொக்காவில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தங்கள் வசம் எடுத்து குற்றவாளிகள் தங்கி இருந்த இடத்தை மகஜர் நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நடத்திவந்த தீவிரவாத நடவடிக்கைகள் , வெடிகுண்டு வைக்க எங்கு மற்றும் எப்படி திட்டம் தீட்டினர் போன்றவற்றை அவர்களிடம் இருந்து தகவல் சேகரிக்கும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிவமொக்கா பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தனர் மற்றும் எந்த இயக்கத்தின் தொடர்பு இவர்களுக்கு தொடர்பு இருந்தது போன்ற தகவல்களையும் இவர்களை விசாரித்து சேகரித்து வருகின்றனர். தற்போது தப்பியோடியுள்ள மற்றொரு சந்தேகத்துக்குரிய தீவிரவாதியையும் கைது செய்ய தங்கள் தொடர்புகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தரும் தகவல்களை வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய தீவிரவாதி மங்களூரை சேர்ந்த மாஜ் முனீர் அஹமத் மற்றும் சிவமொக்கா சித்தேஸ்வர நகர் சையத் யாசீன் மற்றும் மற்றொருவன் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரீக் முஹம்மத் ஆகியோரிடம் தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15 அன்று பிரேம் சிங்க் கத்தி அறுப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஜீபிஉள்ளாவிடம் விசாரணை நடந்தது. அப்போது தீவிரவாத இயக்கங்களுடன் அவன் தொடர்பு வைத்திருந்த தகவல் கிடைத்தது. இந்த மூவருக்குள் தொடர்பு இருப்பது மொபைல் போன்களை பரிசீலனை செய்த போது தெரியவந்துள்ளது. தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு குறித்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்ட்டிருப்பதுடன் யாசீன் மற்றும் மாஜ் முனீரை சிவமொக்கா போலீசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். சிவமொக்கா உட்பட மலைநாட்டில் பெரிய அளவில் சேதம் ஏற்படும் அளவில் சதி நடத்த கைது செய்யப்பட்டவர்கள் திட்டம் தீட்டி இருப்பது குறித்து கிடைத்த தகவலை தொடர்ந்து எப் எஸ் எல் அதிகாரிகள் குழு விரைந்து வந்து சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளிடம் கிடைத்த தகவல்களை பரிசீலித்து வருகின்றனர். சிவமொக்காவில் உள்ள பழைய குருபுராவின் திறந்த வெளியில் வெடி வைக்க திட்டம் தீட்டியுள்ளனர். இந்த நிலையில் எப் எஸ் எல் குழுவினர் குருபுராவின் துங்கா நதி கரையில் குற்றவாளிகளுடன் இட சோதனை நடத்தியுள்ளனர் .