தீவிரவாதிகளுக்கு உதவி: என்.ஐ.ஏ அதிரடி

புதுடெல்லி : அக்டோபர். 12 – ஜம்மு – காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு ( எ ன் ஐ ஏ ) ஜம்மு-காஷ்மீர் , டெல்லி , உத்தர பிரதேசம் , உட்பட ஏறக்குறைய 18க்கும் அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி பயங்கரவாதிகளை திணறடித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு உதவி அளித்த குற்றத்துக்காக கால் புக் கக்கப்போரா என்ற இடத்தில் வசித்து வந்த அபி காலீக் தார் என்பவற்றின் மகனான ஒவைஸி அஹமத் தார் வீடு உட்பட ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் என் ஐ எ சோதனைகள் நடத்தி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறநர். . பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவிகள் அளித்து வந்த குற்றத்திற்காக ஒரே நேரத்தில் மத்திய காஷ்மீர் உட்பட பல பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டுள்ள என் ஐ எ , லக்ஷர் – ஏ – தொய்பா , ஜெய்ஷ் – ஈ – முஹம்மத் , ஹிஜ்புள் முஜாஹதீன் , அல் பத்திரா , உட்பட பல பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ள சந்தேகத்தின் பேரில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என என் ஐ எ அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷோபியான் , ஸ்ரீநகர் , பாராமுல்லா , புல்வாமா , உட்பட ஏழு இடங்கள் மற்றும் உத்தரபிரதேசம், டெல்லி , டெல்லிபுரப்பகுதி உட்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் கும்பல்களுக்கு எதிராக  இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி கொலைகள் செய்து வரும் நிலையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நபர்கள் மற்றும் இயக்கங்களுக்கு எதிராக இந்த சோதனைகள் நடந்து வருகிறது. நேற்று தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கிடையில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டுக்கப்பட்டிருப்பதுடன் , அவன் இம்தியாஜ் அஹமத் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. லக்ஷர் – ஏ – தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவன் சமீபத்தில் பந்திபோராவில் பொதுமக்களை கொலை செய்த விவகாரத்தில் பங்கு கொண்டவன் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிர மற்றும் பயங்கரவாத கும்பல்கள் சுட்டதில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது