தீவிரவாதிகளுடன் தொடர்பு – 2 பேர் கைது

சிவமொக்கா : செப்டம்பர் . 20 – மாநிலத்தின் மலைநாடு பகுதிகளுக்கும் தீவிரவாதிகளின் தொடர்புகள் துவங்கியுள்ள நிலையில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்துக்குரிய இரண்டு பேரை சிவமொக்கா மற்றும் மங்களூரில் தங்கள் வசம் எடுத்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். . தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் சந்தேகத்தில் சிவமொக்காவின் சித்தேஸ்வரா நகரின் சையத் யாசின் என்ற பைலு என்பவனை வசத்தில் எடுத்துள்ள போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐ சி எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இவனுக்கு தொடர்புள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் இவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிவமொக்காவின் பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரியில் குற்றவாளி இளைஞன் படித்து வருகிறான். இந்த இளைஞனுடன் மங்களூரை சேர்ந்த மாஜ் என்பவனையும் வசத்தில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீர்த்தஹள்ளி சொப்பு குட்டேவை சேர்ந்த ஷாரிக் என்பவன் தற்போது தலைமறைவாகியுள்ளான். அவனை கண்டு பிடிப்பதில் போலீசார் தீவிரமாயுள்ளனர். இதில் யாசினை சிவமொக்கா கிராமாந்தர போலீசார் வசத்தில் எடுத்து விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவர்.