தீவிரவாதிகளுடன் மோதல்ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்

ஸ்ரீநகர், ஆகஸ்ட். 5 – ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். ராணுவத்தினர் – பயங்கரவாதிகள் இடையேயான துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.