தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அழைத்த அல்கொய்தா- விசாரணையில் தகவல்

பெங்களூர் : ஜூலை. 28 – சி சி பி போலீசார் தற்போது கைது செய்துள்ள இரண்டு சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் சமூக வலைதளங்கள் மற்றும் டெலிகிராம் மற்றும் முக புத்தகத்தில் தீவிரவாத தலைவர்களின் பேச்சு குறித்த விடீயோக்களை போஸ்ட் செய்து இளைஞர்களை கவர்ந்துள்ள விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக அமைதியை சீர்குலைக்கும் விடீயோக்களை போஸ்ட் செய்து வந்தது குறித்து இதற்க்கு முன்னர் பேஸ் புக் நிறுவனம் இரண்டு பேரையும் எச்சரித்துள்ளது. பின்னர் இவர்களின் கணக்குகளை ரத்து செய்திருப்பினும் அக்தர் ஹுசேன் போலி கணக்கு திறந்து தன் அக்கிரம நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளான் . வங்காள மொழியில் போஸ்ட் செய்துள்ள கடிதங்கள் , மற்றும் விடியோக்கள் குறித்து தகவல் அளிக்குமாறு பேஸ் புக் , டெலிகிராம் , வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சி சி பி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். சமூக வலைதளங்களில் தீவிரவாதம் குறித்து இவ்விருவரும் தீவிரமாக இருந்தது குறித்து கவனித்த அல் கொய்தா இயக்கத்தின் உறுப்பினர்கள் இவர்களை தொடர்பு கொண்டு ஜிஹாத் போராட்டம் குறித்து மூளை சலவை செய்துள்ளனர். தமிழ் நாட்டின் சேலத்தில் கைதான ஆதில் ஹுசேன் உறுப் ஜுபான் என்பவன் இவர்களை மூளை சலவை செய்துள்ளான். இதில் ஆச்சரியமான விஷயமெனில் இரண்டு சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளுக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இருக்க வில்லை. நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் அல் கொய்தா இயக்கத்தின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீவிரவாதி இவர்கள் இருவரை காஷ்மீருக்கு வருமாறு அழைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது கைதாகியுள்ள இவர்கள் இருவரும் தீவிரவாதிகளிடம் மற்றும் அல் கொய்தா இயக்கத்தவருடன் பேசியுள்ள பேச்சுக்கள் விசாரணையில் தெரிய வந்திருப்பதுடன் இது குறித்து விரிவான விசாரணை நடத்த சி சி பி அதிகாரிகள் தற்போது முற்பட்டுள்ளனர்.