தீவிரவாதிகள் கைவரிசையா? என்ஐஏ விசாரணை

பெங்களூர் மார்ச் 1
பூங்கா நகர் சிலிக்கான் சிட்டி பெங்களூரில் இன்று குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயமடைந்து உள்ளனர். பெங்களூர் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் இது தீவிரவாதிகள் கைவரிசையா கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பெங்களூர் நகரில் அடிக்கடி வெடிகுண்டு புரளி ஏற்படுவது வழக்கம். சமீபத்தில் பெங்களூரில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையின் போது அது வெறும் புரளி என தெரியவந்தது. இதுபோல் இரண்டு மூன்று முறை பெங்களூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதற்கிடையே பெங்களூரை தீவிரவாதிகள் தங்களின் புகலிடமாக கொண்டு இருப்பதாகவும் இங்கிருந்து படி சர்வதேச அளவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளிவந்தன. தீவிரவாத நடவடிக்கை தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர் இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பெங்களூரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து இருப்பது தேசிய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து உள்ளது குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது