தீவிரவாதிகள் கைவரிசை

மங்களூர் : நவம்பர். 20 – சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதில் தீவிரவாதிகளின் கைவரிசை இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த முற்பட்டுள்ள போலீசார் ஆட்டோவில் பயணித்தவர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதே வேளையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை , மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மற்றும் மாநில போலீஸ் உயர் இயக்குனர் பிரவீன் சூட் ஆகியோரிடம் தகவல்களை சேகரித்துள்ளனர். இந்த விவகாரத்தை தீவிரமாக கருதிவரும் மாநில உள்துறை பெங்களூரிலிருந்து மேலும் பல வெடிகுண்டுகள் நிபுணர்களுடன் சேர்ந்து மங்களூருக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த அனைத்து வளர்ச்சிகளுக்கிடையில் தேசிய புலனாய்வு முகம அதிகாரிகளும் மங்களூருக்கு வந்து விசாரணை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ஏ டி ஜி பி அலோக் குமார் இந்த வெடிப்பு சம்மந்தமாக அனைத்து கோணங்களிலும் மிக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . வட்டாரங்கள் தெரிவிக்கும் வகையில் வெடி குண்டுக்கு காரணமான ஆட்டோவில் குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவிர இதற்க்கு தொடர்புடைய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தடவியல் துறை சோதனைகள் நடத்த இருப்பதுடன் இந்த சோதனைகளுக்கு பின்னர் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் டெஹ்ரிவிக்கியின்றன. கந்தநாடி போலீஸ் சரகத்தில் சாகுரி என்ற இடத்தில் நேற்று மாலை சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் வெடி வெடித்தது போன்ற சம்பவம் நடந்திருப்பதுடன் இதனால் இரண்டு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது ஒரு மின்கசிவு விவகாரம் என்றே கருத்தப்பட்டது. ஆனால் போலீஸ் துறை நடத்திய முதல் கட்ட விசாரைணயில் இந்த ஆட்டோவில் பல சந்தேகத்துக்குரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள சி சி டி விகளிலும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் இந்த ஆட்டோவில் நட்டுகள் , போல்ட்டுகள் , பேட்டரி மற்றும் சர்க்யூட் மாதிரியான பொருட்களை கண்டெடுத்துள்ளனர்.