தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: ஜன.5- ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுக்காப்புப் படையினரும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் சோடிகம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் அதிகாலையில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புப் படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு இருவருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.