
பெங்களூர் : ஆகஸ்ட். 29 – மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களில் கொடூர செயல்களில் ஈடு பட சூழ்ச்சிகள் செய்துவந்த ஐந்து சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளில் தலைமறைவாயிருந்த இரண்டாவது குற்றவாளி ஜுனைத்தின் கூட்டாளியை ஆர் டி நகர் போலீசார் கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். ஜூனைத்தின் கூட்டாளி மற்றும் பிரபல ரௌடி மொஹம்மத் அர்ஷத் கான் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. இவனிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. கைது செய்ய பட்டுள்ள அர்ஷத் கான் சந்தேகிக்கப்படும் தீவிரவாதி ஜுனைன் அஹமதின் கூட்டாளி என்பதுடன் இருவரும் நெருங்கிய நண்பர்களாயிருந்துள்ளனர். மாநிலத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து பயங்கரவாத பிரிவை உருவாக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது போலீஸ் பிடிக்குள் உள்ள மொஹம்மத் அர்ஷத் கான் கடந்த 2017ல் நூர் அஹமத் என்பவனை கடத்தி சென்று கொலை செய்த விவகாரம் தொடர்பாக குற்றவாளியாகி கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமறைவாயிருந்ததுடன் நகரில் திரிந்துகொண்டும் இருந்துள்ளான். அப்போது ஜூனைநின் தொடர்பு கிடைத்து இருவரும் இனைந்து பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்துள்ளனர். நம்பகமான தகவலை வைத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர் டி நகரில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனைகள் மேற்கொண்டபோது அர்ஷத் கான் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளான் இந்த நிலையில் போலீசார் அவனை சமாதான படுத்த முயற்சித்தும் கத்தியை வீசி எரிந்து விட்டு தப்பிக்க முயற்சித்துள்ளான் . இந்த தப்பிக்கும் முயற்சியாக இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளான். பின்னர் போலீசார் அவனை கைது செய்து இவனிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017ல் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நூர் அஹமத் என்பவரின் கொலை விவகாரத்தில் அர்ஷத் கான் ஈடுபட்டுள்ளான் . ஐந்து பயங்கரவாதிகள் மற்றும் ஜூனைத்தும் இந்த கொலை விவகாரத்தில் குற்றவாளியாவான் . கொலை விவகார குற்றச்சாட்டு எழுந்தபோது அர்ஷத் கானுக்கு வெறும் 17 வயதே ஆகியிருந்தது. பின்னர் இந்த கொலை விவகாரத்திலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவன் பல்வேறு கொலை முயற்சிகள் , வழிப்பறி மற்றும் வேறு பல குற்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளான். இவனுக்கு எதிராக நகரின் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 17 புகார்கள் பதிவாகியுள்ளன. ஜுனைத் துவங்கிய பயங்கரவாத பிரிவில் அர்ஷத்தின் பங்கு இன்னமும் தெளிவாகவில்லை . ஆனாலும் அர்ஷத் கான் ஜூனைனுடன் தொடர்பில் இருந்தது தெரிந்திருப்பினும் இது குறித்து போலீசார் தற்போது ஜூனைனிடம் விசாறனை மேற்கொண்டுள்ளனர். பிரபல ரௌடியாயிருந்த ஜுனைன் கான் 2008ல் பெங்களூரில் நடந்த தொடர் வெடிகுண்டுகள் முக்கிய குற்றவாளி டி நசீர் என்பவன் கைது செய்யப்பட்டபோது அவனுக்கு பரப்பன அக்ராஹாரா சிறையில் மூளை சலவை செய்துள்ளான். இவன் மேலும் ஐந்து பேருடன் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் நகரில் அமைதியை குலைக்கும் வகையில் பயங்கரவாத குழுவை அமைத்தான் என்றும் தெரியவந்துள்ளது. நகரில் சமீபத்தில் தான் சி சி பி போலீசார் ஐந்து சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகளை கைது செய்தனர். இந்த ஐந்து பேருக்கும் பயங்கரவாதி ஜுனைத் வெளிநாடுகளிலிருந்து கிரேனைட் அனுப்பியுள்ளான். தற்போது ஜுனைத் வெளிநாட்டில் தலைமறைவாயுள்ளான். இவனை கண்டு பிடிக்க சி சி பி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர் என டி சி பி முனைவர் எஸ் டி ஷரணப்பா தெரிவித்துள்ளார்.