தீவிரவாத இயக்க கமாண்டர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: அக்டோபர். 13 – நாட்டின் பாதுகாப்பு படைகள் நடத்திய மின்னல் வேக நடவடிக்கையால் ஜெய்ஷ் ஏ மொஹம்மத் இயக்கத்தின் கமேண்டர் பலியாகியுள்ளான் . இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்த்தில் நடந்துள்ளது. இதில் கொலையுண்டவர் ஜெ ஈ எம் இயக்கத்தின் கமாண்டர் ஷாம் கோபி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்குள்ள அவந்திபுராவில் தரால் பகுதியில் தில்வாணி மொக்கத் ஏன்டா இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து கிடைத்த நம்பகமான தகவல்கள் அடிப்படையில் ராணுவம் நடவடிக்கையில் இறங்கியது. அந்த வேளையில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கி சூடு நடந்ததில் இயக்கத்தின் கமேண்டர் பலியாகியுள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தீவிரவாதிகள் அடங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலின் பேரில் இந்த சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது