தீ பற்றி எரிந்த கார் 9 பேர் உயிர் தப்பினர்

சாம்ராஜ் நகர், ஜன.2-
சாலை மீது உலர வைத்திருந்த கேழ்வரகு தட்டு மீது கார் சென்றபோது, காரின் சக்கரத்தில் தட்டு சுற்றிக் கொண்டது. திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த ஒன்பது பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவம் சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகா, ஹொன்னே கவுடன ஹள்ளி – கோபாலபுரா சாலையில் நடந்தது.
ஹொன்னே கவுடன ஹள்ளி- கோபாலபுரா சாலையில் கேரளாவில் இருந்து வந்த கார் சென்றபோது அங்கு உலர் வைத்திருந்த பயிர்களின் தட்டு காரின் டயரை சுற்றிக்கொண்டது. தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
காரில் பயணம் செய்தவர் கள் தங்களது உடமைகளு டன் கீழே இறங்கி விட்டதால் உயிர் தப்பினர். தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
இதே போன்ற சம்பவம் ஒன்று 2019 லும் நடந்தது. இனிமேல் சாலையில் கேழ்வரகு நெற்பயிர்களின் தட்டுகளை உலர் வைக்க கூடாதென உத்தரவிடப்பட்டது. சில ஆண்டுகள் அதனை பின் பற்றினர். மீண்டும் சாலைகளில் உலர வைத்து வருகின்றனர்.
இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.