தீ பற்றி எரிந்த வீடுதாய் மகன் உயிர் தப்பினர்

பெங்களூரு, மார்ச் 27: பூஜை அறையில் இருந்த விளக்கில் இருந்து தீ பரவி வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
வீட்டின் பூஜை அறையில் இருந்த‌ தீபத்திலிருந்து தீ வீட்டின் படுக்கையறை வரை பரவியதில், பொருள்கள் எரிந்து நாசமானது. அதிரிஷ்டவசமாக தாய், மகள் தப்பினர்.
வீட்டின் பூஜை அறையில் இருந்த‌ தீபத்திலிருந்து தீ வீட்டின் படுக்கையறை வரை பரவியது. இதில் வீட்டில் இருந்த
தாயும் மகளும் கட்டடத்தின் முதல் தளத்திற்கு ஓடி வந்து உதவி கோரி கூச்சலிட்டனர். அதற்குள் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் உள்ள டி.வி, கேஸ், மின் வயர்கள் மேலும் பரவி விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் படையினர் தாய் மற்றும் மகளை காப்பாற்றினர்.