தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, செப்.30- உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட தாய், 2 மகள்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அவர்களை காப்பாற்ற முயன்ற தாத்தாவும் உயிரிழந்தார்.
அது மட்டும் இல்லாமல், தீக்காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.தற்போது, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.