தீ விபத்து – லட்சக்கணக்கில் சேதம்

பெங்களூரு, ஜன.15 – அரகெரே கேட் அருகில் உள்ள சவுத் இந்தியன் ஷாப்பிங் மாலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டு பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன . வார இறுதி ஊரடங்கை முன்னிட்டு மாலில் இரவு பணியாற்றிவந்த மால் ஊழியர்கள் பணிக்கு வராததால் எவ்வித உயிர் சேதமும் நடக்கவில்லை. சவுத் இந்தியன் மாலின் நில பகுதியில் அதிகாலை 3 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. வார இறுதி ஊரடங்கை முன்னிட்டு மாலில் எந்த ஊழியரும் இருக்கவில்லை. இதனால் தீ பிடித்தது குறித்து யாருக்கும் தெரியவரவில்லை. பணியில் உலவிக்கொண்டிருந்த போலிஸாருக்கு மாளிலிருந்து கரும் புகை வருவதை கவனித்து தீ பிடித்த இடத்திற்கு செல்வதற்குள்ளாக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் காலை 9 மணி வரை போராடி தீயை அணைத்துள்ளனர்.