தீ விபத்து: 16 பேர் பலி- மீட்பு பணி தீவிரம்

பிலிப்பைன், செப். 1: பிலிப்பைன்ஸில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.