தீ விபத்து 3 குழுக்கள் விசாரணை

பெங்களூர் : ஆகஸ்ட். 12 – நகரின் பெங்களூர் கிரேட்டர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அதன் வளாகத்தில் உள்ள தர பரிசோதனை கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்து விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மாநில அரசு மூன்று குழுக்கள் வாயிலாக தனித்தனி விசாரணை நடத்த முற்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிகாலை மூன்று பேரை போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். முக்கியமாக போலி பில்கள் வாயிலாக மாநகராட்சியிலிருந்து பணங்களை பெற்றவர்களே இந்த தர கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின்னர் உள்ளனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் மாநிலஅரசு மாநகராட்சி அதிகாரிகள் , போலீசார் உட்பட மூன்று குழுக்க வாயிலாக தனி தனி விசாரணை நடத்த முன்வந்துள்ளது. தீ விபத்து விவகாரம் தொடர்பாக மாநகராட்சி தலைமை பொறியாளர் கே ப்ரஹலாத் அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார். இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 337, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீ விபத்து நடந்த இடத்தில் இருந்த மூன்று பேரை வசம் எடுத்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இரண்டு பொறியாளர்கள் மற்றும் ஒரு கடை நிலை ஊழியன் ஒருவன் போலீசார் வசத்தில் உள்ளனர். இந்த மூன்று பேரும் பரிசோதனைக்கூடத்திற்கு ஏன் சென்றனர். மூன்று பேரும் ஒன்றாக ஓடி வந்தது ஏன் , என்பது குறித்து இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதே வேளையில் டாம்பர் மற்றும் சிமெண்ட் உட்பட வேறு பல ரசாயன பொருள்கள் இங்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. டாம்பர் தொடர்பாக குறிப்பிட்ட சோதனைக்கூடத்தில் சோதனைகள் நடந்து வந்தது. இந்த நேரத்தில் அசம்பாவிதம் nadandhulladhaaga தெரிய வந்துள்ளது. இது குறித்து அல்சூர் கேட் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் காயமடைந்த 9 பேருக்கும் விக்ட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் இவர்களில் ஒருவர்க்கு மட்டுமே 30 சதவிகித தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்று பேருக்கு 20 சதவிகிதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது . மற்றவர்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் வரை தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவரும் நேற்று இரவே அவசர சிகிசிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 48 மணிநேரம் அனைத்து தீ காயாளிகளின் உடல் நிலை குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தற்போதைக்கு யாருக்கும் உயிராபத்து இல்லை எனவும் மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.