தீ விபத்து

மௌ (உத்தரப் பிரதேசம்), டிச. 28- உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அருண் குமார் கூறும்போது, “மௌ மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். முதல் கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது.