
பெங்களூர் : ஆகஸ்ட். 17 – ஆனேக்கல் துணை பிரிவு பகுதியின் அத்திபெலே அருகில் பல்லூரில் கொளுத்தப்பட்டு அழுகிய நிலையில் இளைஞன் ஒருவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது கொலையாயிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள உடல் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தமிழகத்தின் ஓசூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றிவந்த தீபக் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வேறெங்கோ தீபக் கொலை செய்யப்பட்டு டி ஆர் எஸ் பார் அருகில் உள்ள நீலகிரி தோப்பில் உடலாய் வீசியெறிந்துவிட்டு குற்றவாளிகள் தப்பித்துள்ளனர். இந்த கொலை மூன்று நாடக்குழு முன்னர் நடந்திருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு கிராமந்தார எஸ் பி மல்லிகார்ஜுனா பாலாதண்டி , ஏ எஸ் பி லக்ஷ்மிநாராயன் ஆகியோர் விரைந்து சென்று மேற்பாரவையிட்டு மேற்பாராவை நடத்தியுள்ளனர். இதே போல் மற்றொரு சம்பவத்தில் குடி போதையில் இளைஞன் ஒருவன் தன்னுடைய நண்பனையே கொலை செய்துள்ள சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தின் லிங்கசுகூறு தாலூகாவின் நாகராலா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. ரவிக்குமார் (33) என்பவர் இந்த சம்பவத்தில் கொலையுண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரை கொலை செய்தவர் ஹூப்ளி நகரை சேர்ந்த பவன்குமார் என தெரிய வந்துள்ளது. நேற்று இரவு கொலையுண்ட ரவிக்குமாரின் வீட்டு மொட்டை மாடியில் இருவரும் மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் இருவருக்குமிடையேஒரு சாமான்ய விஷயமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஹூப்ளியை சேர்ந்த பவன் குமார் தன்னுடைய நண்பனையே கொலை செய்துள்ளான். இந்த கொலை சம்பவம் குறித்து முதகள் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.