துணிக்கடையில் தீ விபத்து லட்சக்கணக்கில் நாசம்

பெங்களூர் : நவம்பர். 28 – நகரில் தொடர்ந்து தீ விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் கும்பாரப்பேட்டே குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பெருமளவில் நஷ்டங்கள் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு சிக்கஜாலாவில் ஷூ மற்றும் துணிக்கடையில் தீ பிடித்ததில் மொத்த கடையும் எரிந்து சாம்பலாகியுள்ளது. சிக்கஜாலாவின் ஷூ மற்றும் துணிக்கடையில் நேற்று இரவு 10 மணிக்கு தென்பட்ட தீ கண நேரத்தில் மொத்த கடைக்கும் பரவியதில் லட்ச கணக்கான மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. ஆனால் கடையில் யாரும் இல்லாதிருந்ததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மின்சார கசிவால் தீ பற்றியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . தீயை பார்த்த உடனேயே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். சிக்கஜாலா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தான் கும்பர்பேட்டேவில் அதில் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ பற்றியதில் அடுத்த நாள் வரை தீ அணையாமல் இருந்தது . ஆரம்பத்தில் பிளாஸ்டிக் குடோனிலிருந்து 3 மற்றும் நான்காவது மாடியில் தற்செயலாக தீ பிடித்து பின்னர் அது ஐந்தாவது மாடிக்கும் பரவியது. ஐந்தாவது மாடியில் எவ்வளவு அனைத்தும் தீ பரவிக்கொண்டே இருந்தது . இதனால் தீயணைப்பு ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.