துண்டிக்கப்பட்ட 2 பெண்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

மண்டியா : ஜூன். 8 – இரண்டு வெவ்வேறு இடங்களில் வயிற்றிலிருந்து கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்ட இரண்டு பெண்களின் இறந்த உடல்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டிடுக்கப்பட்டிருப்பதுடன் இந்த சம்பவத்தால் மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பாண்டவபுரா மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணா தாலூகாக்களில் அரகெரே ஆகிய இடங்களில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் வயிற்றிலிருந்து கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களின் இறந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டவபுராவின் பேபி கெரே-கே பெட்டஹள்ளி மார்க்கத்தின் இடையில் உள்ள பேபி கால்வாயில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அரை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மற்றொரு பெண்ணின் உடல் ஸ்ரீரங்கப்பட்டணா தாலூகாவின் அரகெரே போலீஸ் சரகத்தில் அரகேரே கிராமத்தின் அருகில் சி டி எஸ் கால்வாயில் மிதந்து வந்து விவசாய நிலததில் கண்டெடுக்கப்பட்டிருப்பதுடன் இரண்டு உடல்களின் அரை பகுதியை கத்தரித்து சாண பையில் போட்டு இரண்டு கால்களை கட்டி கால்வாயில் வீசியுள்ளனர்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு பெண்களின் உடல்களின் அரை பகுதி கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்து பாண்டவபுரா மற்றும் அரகெரே போலீசார் விரைந்து வந்து பரிசீலனை செய்துள்ளனர். இரண்டு இடங்களிலும் கிடைத்த அரை துண்டிக்கப்பட்ட உடல்கள் வயிற்றிலிருந்து கீழ் பகுதி வெட்டப்பட்டுள்ளன. மீத அரை பகுதி உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள இரண்டு உடல்களின் கால்களை கயிற்றால் கட்டி இருப்பதுடன் வேறெங்கோ கொலை செய்து விட்டு பின்னர் உடல்களை கத்தரித்து சாட்சியை அழிக்க கொலையாளிகள் முயற்சித்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர் . தவிர இந்த இரண்டு சடலங்களின் மீத பகுதியை தேடும் பணியில் போலீசார் மும்முரமாய் உள்ளனர். சம்பவ இடங்களுக்கு மாவட்ட போலீஸ் உயரதிகாரி உட்பட பல மூத்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர்

. இந்த சம்பவம் குறித்து தங்கள் இலாகாவின் அதிகாரிகளிடமிருந்து தகவல் பெற்றுள்ளனர். தவிர இந்த விவகாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களின் உடல்கள் குறித்து தகவல்களை சேகரிப்பதில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.