துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ்காரர் தற்கொலை

கதக் : ஜூன். 16 – குடும்ப தகராறாலும் உடன் இருக்கும் ஊழியரின் ஒத்துழைப்பின்மையாலும் வெறுத்துப்போய் பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாவட்ட ஆட்சி அலுவலகத்தின் கருவூல அலுவலகத்தில் நடந்துள்ளது. டி ஆர் போலீஸ் கான்ஸ்டபிள் கிரண் கொப்பதா என்பவர் தற்கொலை செய்துகொண்டவர். மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் பணியாற்றிவந்த போது கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு கிரண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடுமப தகராறு மற்றும் உடன் உழைப்பவரின் உதவியின்மை ஆகியவை இவருடைய தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஆனால் இறந்து போன கான்ஸ்டபிளின் தந்தை கிரண் சமீப காலமாக மனவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இரண்டாவது ஷிப்ட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்கு போகும் முன்னர் துப்பாக்கியால் கழுத்தில் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதில் கிரண் அதே இடத்தில் இறந்துள்ளார். இறந்துபோன கிரண் கடந்த 20 ஆண்டுகளாக டி ஆர் கான்ஸ்டபிளாக பணியாற்றிவந்துள்ளார். கடந்த ஐந்தாறு வருடங்களாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது . தவிர இவரின் மனைவியும் விவாகரத்துக்கு முயன்று வந்துள்ளார். வருகின்ற சம்பளத்தில் பாதியை மனைவி மற்றும் குழந்தைகளின் வளர்ப்புக்கு கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது . நான் ஏன் அரை சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கவலையில் இவர் மனவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வெறுத்து போய் தன்னை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு எஸ் பி , டி வொய் எஸ் பி , சி பி ஐ மற்றும் போலீஸ் அதிகாரிகள் , கை ரேகை நிபுணர்கள் , வந்து ஆய்வு செய்து இது குறித்து கதக் கிராமத்தார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.