துப்பாக்கி சுடும் பயிற்சி: 4 பேர் பலி

பிரேசிலியா, ஜன.17-
பிரேசில் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அமேசானாஸ் மாகாணம் மனாஸ் நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.
நேற்று முன்தினம் இந்த பயிற்சி மையத்தில் வழக்கம் போல் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர வெடிவிபத்து நேரிட்டது.
இதில் பயிற்சி மையத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.