தும்கூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க தீவிரம்

பெங்களூர் : மார்ச். 2 -நகரில் மெட்ரோ ரயில் துவக்க நாளிலிருந்தே பெரும்பாலான மக்களின் பெருத்த ஆதரவை பெற்று வருகிறது. பலரும் இப்போது தங்கள் சொந்த வாகனங்களை பயன் படுத்துவதை தவிர்த்து மெட்ரோ ரயிலையே பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்கள் மிக்க நகர சாலைகளில் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட மெட்ரோ ரயிலில் பயணம் சுகமாக இருக்கிறது. தும்கூர் மற்றும் பெங்களூர் நகர மெட்ரோ ரயில் இணைப்பிற்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வடக்கு பெங்களூர் மாதவராவிலிருந்து தும்கூர் வரையிலான 52.41 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும் விஷயமாக பெங்களூர் மெட்ரோ ரயில் கார்பொரேஷன் லிமிட்ஸ் ( பி எம் சி ஆர் எல் ) திறந்த டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பணிகள் அரசு மற்றும் தனியார் கூட்டுடன் நடக்க உள்ளன. தற்போது ஊதா மார்கத்தில் சுரங்கபாதியில் தண்டவாளங்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தும்கூர் மார்க்க மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஏல ஆவணங்களை மார்ச் ஒன்று முதல் ஆன் லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் இரண்டாம் தேதி கடைசி நாளாகும். டெண்டர்கள் அன்றே திறக்கப்படும்.