தூங்கிக் கொண்டிருந்தபெண் குழந்தை கடத்தல்

ஹாசன், மார்ச் 28:
குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மர்மநபர்கள் கடத்திச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஹாசன் சகலேஷ்பூர் தாலுகாவின் மலாலி கிராமத்தில் நடந்துள்ளது.
மலாலியாவைச் சேர்ந்த சஞ்சு மற்றும் ரோஹித் தம்பதியின் 14 மாத பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலம் சத்மா மாவட்டம் வீர்சிங்பூர் தாலுகாவை சேர்ந்த சஞ்சு மற்றும் ரோஹித் தம்பதியினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செங்கல் சூலையில் வேலை செய்வதற்காக வந்தனர்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று மாலை வேலை முடிந்ததும், தம்பதியினர் தங்கள்2 குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு குளிப்பதற்கு ஆற்றுக்குச் சென்றனர். இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருவரும் வீடு திரும்பியபோது, ​​பெண் குழந்தை காணவில்லை. குழந்தையை கடத்தியவர்கள், ஆண் குழந்தையை அப்படியே விட்டுச் சென்றுள்ளன‌ர்.
குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெண் குழந்தை மட்டும் கடத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் வெளியாகியுள்ளன. தம்பதி மற்றும் குழந்தைகளிடம் நெருங்கி பழங்கியவர்களே இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சகலேஷ்பூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.