தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி 4 பேர் பலி

டெல்லி , செப்டம்பர். 21 –
சீமாபுரி பகுதியில் நேற்றிரவு சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் அருகே அதிகாலை 1.51 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் கரீம் (52), சோட் கான் (25), ஷா ஆலம் (38), மற்றும் ராகு (45) என அடையாளம் காணப்பட்டனர். காயமடைந்தவர்களில் மனீஷ் (16), பிரதீப் (30) ஆகியோர் அடங்குவர். சம்பவம் நடந்தபோது அவர்கள் சாலை டிவைடர் மீது தூங்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து டிரைவர் லாரியுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.