தென்னாப்பிரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் இந்திய ரசிகர்கள்

ஜொகன்னஸ்பர்க், டிச. 18-இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம். நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி பிங்க் ஜெர்சியில் களமிறங்கிய போது இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல் பிங்க் ஜெர்சி பற்றி அர்ஷ்தீப் சிங், நாங்கள் தென்னாப்பிரிக்கா அணியை எப்படி 400 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்ற சிந்தனையில் இருந்தோம் என்று கூறினார்.
ஆனால் வெறும் 116 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டாகியது. இதனை கிரி படத்தில் வடிவேலுவை இந்திய அணியாக மாற்றி, ஏன்டா கந்துவெட்டி முருகேசா.. நாங்க என்னவோ நீ பெரிய ரவுடினுல நினைச்சேன்.. என்ன இது இவ்ளோ கேவலமா தோத்து இருக்க என்று கிண்டல் செய்ட்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல். நேற்றைய ஆட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
ஆனால் சஞ்சு சாம்சனுக்கான தேவையே இல்லை என்ற நிலையில் இந்திய அணி விளையாடியது.
இதனை ஏய் படத்தில் சரத் குமார் வடிவேலு மாங்கு மாங்கென்று மிதித்துவிட்டு, “எப்படா வந்த” என்று கேட்பார். அதுபோல் மேட்ச் பார்த்த இந்திய அணி ரசிகர்கள், அக்சர் படேல் மற்றும் சாம்சன் இருவரையும் பார்த்து இன்னைக்கு மேட்ச்ல இருந்தியா என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பிங்க் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் மீதம் வைத்து அபார வெற்றியை பெற்றது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பலரும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இப்படி ஆடியிருக்கலாம் என்ற ரீதியில் கருத்து கூறி வந்தனர்.
இதனை ரெண்டு படத்தில் கிரிகாலனான வடிவேலுவிடம் உதவியாளராக உள்ள போண்டா மணி, பெட்டிக்குள்ள போன பாய் இங்க வந்துட்டேன் என்று கூறுவார்.
இதனை மாற்றி, இந்திய அணி சொல்வது போல், உலகக்கோப்பை ஃபைனலில் தோற்ற நாங்கள், இருதரப்பு ஒருநாள் போட்டிக்கு திரும்ப வந்துட்டோம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.