தெரு நாய்களுக்கு உணவளித்த முன்னர் ராணுவ வீரர் மீது தாக்குதல்

பெங்களூர் : செப்டம்பர் . 28 – எலஹங்கா அருகில் சொக்கனஹள்ளியில் வீதி நாய்களுக்கு ஆகாரம் அளித்துவந்த இந்திய ராணுவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. வீதி நாய்களுக்கு பிஸ்கெட்டுட்டுகளை விநியோகித்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளநிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சொக்கனஹள்ளியின் ஏன் ஆர் லே அவுட் வாசியான கே அமர்நாத் சவாண் (74) என்பவர் தாக்குதலுக்குப்பட்டவர். சொக்கனஹள்ளியின் எஸ் மற்றும் என் லே அவுட்டில் கடந்த செப்டம்பர் 24 அன்று காலை இவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. கடந்த முன்று வருடங்களாக இந்த பகுதியில் வசித்துவரும் கே அமர்நாத் தினசரி காலை ஏழு மணிமுதல் எட்டு மணி வரை காற்றுவாங்க செல்வதாக தெரிவித்துள்ளார். அப்படி காற்றுவங்கும் நேரத்தில் வீதி நாய்களுக்கு பிஸ்கெட் கொடுப்பதை வழக்கமாய் கொண்டுள்ளார்.அதே போல் நேற்று நாய்களுக்கு பிஸ்கெட்டை கொடுக்கும் வேளையில் வீட்டின் வெளிப்புறம் நின்றிருந்த சந்திரப்பா என்பவர் இவரை அழைத்திருப்பதுடன் இவரை மர பலகையால் தாக்கியும் உள்ளார். தவிர வீதி நாய்களுக்கு இனியும் ஆகாரம் கொடுத்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த சம்பவத்தில காயமடைந்த அமர்நாத் சவாண் தற்போது பாகலூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளியை போலீசார் இன்னும் கைது செய்ய வில்லை.