தெரு நாய்கள் எண்ணிக்கை குறைந்தது

பெங்களூர், ஆக.28-
பெங்களூரில் தெரு நாய்கள் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2019 ல் மூன்று லட்சத்து 10 ஆயிரமாக இருந்த தெரு நாய்கள் எண்ணிக்கை, தற்போது 2 லட்சத்து 20 ஆயிரமாக குறைந்துள்ளது.பெங்களூர் மாநகராட்சி கால்நடை துறை ஜூலை 11ம் தேதி முதல் ஜூலை 25 வரை தெரு நாய்கள் இனப்பெருக்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஏழு நாட்கள் இப்பணி இடையில் தொடர முடியாமல் நிறுத்தப்பட்டது.
எனவே தெரு நாய்கள் கணக்கெடுப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் தெருநாய்கள் பெங்களூர் தெருக்களில் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆண்டில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு செய்த போது ,இதன் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தெருநாய்கள் கோவிட் காரணமாகவும் தெரு நாய்களுக்கு இனப்பெருக்க தடை செய்ததாலும் இதன் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.தெரு நாய்கள் கணக்கெடுப்பு செய்ய 50 குழுக்கள் காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை தினமும் கணக்கெடுக்கப்பட்டது.
இது தெரு நாய்கள் இனப்பெருக்க தடைக்கு உதவிகரமாக இருந்தது.

கடந்த ஐந்தாண்டுக்கு முன் மாநகராட்சி ஏஜென்சிகள் 2, 3 லட்சம் இனப்பெருக்க தடைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
3.5 லட்சம் நாய்களுக்கு இன்ஜெக் ஷன் மூலம் கருத்தடை செய்யப்பட்டது.

குறைந்தபட்சம் 9 லட்சம் தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை இனப்பெருக்க தடை 2000-01 முதல் 24 பிப்ரவரி 2023 வரை 15 லட்சம் தெருநாய்களுக்கு இன்ஜெக் ஷன் மூலம் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து விலங்குகள் உரிமை தன்னார்வலர் அருண் பிரசாத் என்பவர் கூறுகையில், மாநகராட்சி தெரு நாய்கள் எண்ணிக்கையை முறையாக சரியாக நடத்தவில்லை.

இவர்கள் ஒவ்வொரு தெருக்களிலும் சென்று தெரு நாய்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு இருக்க வேண்டும். ஆனால் மேலோட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது.