தெரு நாய் கடித்து சிறுவன் சாவு

சித்ரதுர்கா : ஜூலை. 24 – விளையாடிக்கொண்டிருக்கும்போது தெரு நாய் கடித்ததில் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள சம்பவம் இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது. மேதஹள்ளிபெல்லிக்கள்ளுநாயகரஹட்டி கிராமத்தில் வசித்துவந்த யஷ்வந்த் (8) என்ற சிறுவன் இந்த விபத்தில் உயிரிழந்தவன். நாய் கடிப்பால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனை கூடுதல் சிகிச்சைக்கென மங்களூரின் வென்லாக் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துள்ளான் என இது குறித்த வழக்கை பதிவு செய்துள்ள கோட்டே பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். கேசவமூர்த்தி என்பவரின் மகன் யஸ்வந்த் தன் வீட்டின் எதிரில் விளையாடிக்கொண்டிருந்தபோது தெரு நாய் இவனை ஐந்தாறுமுறை கடித்திருந்ததில் இதனால் படு காயமடைந்த சிறுவனை ஜில்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் கூடுதல் சிகிச்சைக்காக மங்களூரில் வென்லாக் மருத்துவமைக்கு எடுத்து சென்றும் சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளான்.