தெரு நாய் மீது காரை ஏற்றியவர் மீது வழக்கு பதிவு

பெங்களூர், பிப். 27-
தெரு நாய் மீது காரை ஏற்றி காயப்படுத்தியதால் கார் உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
பெங்களூர் கன்னிகாம் சாலை லா சீட்டடல் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட் பகுதியில் படுத்திருந்த நாய் மீது கார் ஒன்றை மோத விட்டனர். இதில் நாய்க்கு படுகாயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டது.
இதை கவனித்த செக்யூரிட்டி, மற்றும் குடியிருப்போர் நாய்க்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். வேண்டும் என்றே நாய் மீது காரை ஏற்றியவர் மீது ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரை ஏற்ற போலீஸ் எம்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை. குடியிருப்போர் இதன் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வலியுறுத்தினர்.
காரின் நம்பர் பிளேட்டின் எண் தெரிந்தால் தான்
எப். ஐ. ஆர்., பதிவு செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதன் பின்னர், கார் எண் முழுமையாக கண்டுப் பிடிக்க ப்பட்டு கார் உரிமையாளர் அஜீரா ஹனீப் மீது ஐ.பி.சி., 428, 279 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது