தெலுங்கானாவிற்கு கடத்தப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்

பெலகாவி : அக்டோபர் . 18 – ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில் சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவது மிகவும் அமைதியுடன் நடந்துவரும் நிலையில் கோவாவிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு மிகவும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி லாரியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருமளவிலான மது பானைகளை பறிமுதல் செய்வதில் மாவட்ட கலால் துறையினர் வெற்றியடைந்துள்ளனர் . கடந்த மாதம் லாரியில் ப்ளைவூட் நடுவே மதுபான பெட்டிகளை அடுக்கி கடத்த முயன்றபோது சினிமா மாதிரியில் போலீசார் விரட்டிச்சென்று லாரியை மடக்கி பிடித்துள்ள கலால் துறையினர் இந்த முறையும் அதே மாதிரியில் சோதனைகள் மேற்கொண்டு ட்ரான்ஸபார்மெர் ஏற்றிச்சென்ற லாரியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை கைப்பற்றியுள்ளனர். நம்பகமான தகவலை வைத்து ஹிரேபாகேவாடி சுங்க சாவடி அருகில் நேற்று சோதனைகள் மேற்கொண்ட கலால் துறையினர் ஒரு லாரியை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரித்தபோது இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. இரண்டு ட்ரான்ஸபார்ட்மெர்களுக்கு நடுவே ஒழித்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 பெட்டிகள் இருந்த 5 பல்வேறு நிறுவனங்களின் மது பானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன . லாரி ஓட்டுநர் மஹாரஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த ஸ்ரீராம் சுதாகர் பரடே (30) என்பவனை கைது செய்துள்ளனர். அதே போல் 20 லட்சம் மதிப்புள்ள லாரியும் கைப்பற்றப்பட்டுள்ளது . லாரியில் அதிநவீன தொழில் நுட்பமான ஜி பி எஸ் முறை பொருத்தப்பட்டுள்ளது . வாகன சோதனைகளின் போது வாகனம் முன்னே செல்லாதவகையில் குற்றவாளிகள் ஜி பி எஸ்ஸை ஆப் செய்துள்ளனர். எங்கேயோ இருக்கும் ஒரு குழுவினர் லாரியை தங்கள் கட்டுப்பாட்டில் இயக்கியுள்ளார். இப்போது ஜி பி எஸ்ஸை தொடர்பு துண்டித்து லாரி கைப்பற்றப்பட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல்கள் இருப்பதால் கோவாவிலிருந்து மது பானங்கள் கடத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸபாரமர்களுக்கு இடையே மது பான பெட்டிகளை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என குற்றவாளிகள் கருதியுள்ளனர் . தவிர எந்த கட்சியின் எந்த வேட்பாளருக்கு இவை சொந்தமானவை என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது