தெலுங்கானாவில்காங்கிரஸ் ஆட்சி -கருத்துக்கணிப்பில் தகவல்

ஹைதராபாத் ; நவ. 27: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என தி சவுத் ஃபர்ஸ்ட் செய்தி இணையதளம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை தி சவுத் ஃபர்ஸ்ட் செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. தெலங்கானாவில்
ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்ற நிலையில் 57-62 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பிஆர்எஸ் கட்சி 41-46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்தால் தெலங்கானா மாநிலம் உருவானது முதல் ஆட்சியில் உள்ள சந்திர சேகர ராவ் அரசு, எதிர்கட்சிக்கு வரிசைக்கு செல்லும் சூழல் உருவாகும். 3 முதல் 6 இடங்களுடன் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடியும் என்றும் 9 தொகுதிகளில் போட்டியிடும் ஒவைசியின் எம்ஐஎம் கட்சி 6-7 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.1- 2 இடங்களில் பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறலாம் என்றும் தி சவுதி பெர்ஸ்ட் இணையதளம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.