தெலுங்கானா முதல்வராகரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு

ஹைதராபாத் டிசம்பர் 7
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரேவந்த் ரெட்டி உரிமை கோரிய நிலையில், மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்க உள்ளார். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர் இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்தும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் தெலுங்கானா மாநில காங்கிரஸ் ஆர் இந்த பதவி ஏற்பு விழாவை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் கர்நாடக மாநிலத்திலிருந்து துணை முதல்வர் டி கே சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ள ரேவந்த் ரெட்டிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்