தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள்


பச்சை தேங்காயை நாம் சமையலில் மிகவும் சாமான்யமாக பயன் படுத்துகிறோம். தேங்காய் சட்னி, தேங்காய் ஆல்வா போன்றும் பல தின்பண்டங்கள் செய்து உண்போம். சிலர் பச்சை தேங்காயை அப்படியே உண்பார்கள். பச்சை தேங்காய் வெறும் ருசிக்கு மட்டுமல்ல. இது பல போஷாக்கு அம்சங்களை கொண்டது. தேங்காயில் நம் உடலுக்கு அவசியமான சில முக்கிய போஷாக்கு அம்சங்கள் கிடைக்கிறது. பச்சை தேங்காயை அடிக்கடி உண்டு வந்தால் அதனால் நம் உடலுக்கு சக்தி மட்டுமின்றி பல சுகாதாரக்கேடான பிரச்சனைகளும் விலகும். பச்சை தேங்காயை அடிக்கடி ஏதாவது ஒரு விதத்தில் உண்டபடி இருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் நம்மை அண்டாது. ஆன்டி வைரல் , ஆன்டி பாக்டீரியா , ஆன்டி பாரசைட் ஆகிய குணங்கள் தேங்காயில் ஏராளமாக உள்ளன. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ் களிடமிருந்து உடலை காத்து கொள்ளலாம். விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மற்றும் உடலை அதிகம் வருத்திக்கொள்பவர்களுக்கு பச்சை தேங்காய் உண்பதால் சக்தி வேகமாக கிடைக்கும். இதனால் மேலும் நீண்ட நேரம் பணி செய்தாலும் உடம்பு அசதியாகாது. கூடுதல் சக்தி கிடைக்கும். ஜீரண கோளாறுகளும் விலகும். ஜீரண உறுப்புகள் சுத்தமாயிருக்கும். வாயு , அசிடிட்டி, அஜீரணம் , மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராது. உண்ட உணவு சீராக ஜீரணம் ஆகும். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை தேங்காய் தின்பது மிகவும் நல்லது. இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். அதன் வாயிலாக டயாபிட்டிஸ் தவிர்க்கப்படுகிறது. சில வித கேன்சர்களை எதிர்த்து போராடும் மருத்துவ குணங்களும் பச்சை தேங்காய்க்கு உள்ளது. தேங்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கேன்சர் அணுக்கள் உற்பத்தியை தவிர்க்கும். கெட்ட கொலஸ்டரால்கள் அழிந்து நல்ல கொலஸ்டரால்கள் உருவாகும். இதனால் இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. ரத்த ஓட்டமும் சீராகும். ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். சிறுநீரக பிரச்சனைகளுக்கு பச்சை தேங்காய் மிகவும் நல்லது. பச்சை தேங்காய் உண்பதால் சிறுநீர் பிரச்சனையின்றி எளிதாக வெளியேறும். ப்ளாடர் தொற்று குணமடையும். கிட்னிக்கள் சீராக செயல் படும். உடல் எடை உள்ளவர்களும் பச்சை தேங்காயை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படி செய்வதால் கொழுப்பு கரையும். இதனால் உடல் பருமனும் குறையும். சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சருமத்தின் மேலுள்ள சுருக்கங்கள் நீங்கும். கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர பச்சை தேங்காய் உதவுகிறது.