தேங்காய் பால் போளி (ஒப்பட் )


தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – ஒரு கப்
பால் – முக்கால் கப்
கச கச -அரை கப்
வெல்லம் – ஒரு கப் ஏலக்காய் – மூன்று
எண்ணெய் – போளி சுட
உப்பு – ஒரு சிட்டிகை
மைதா மாவு – முக்கால் கப்
சீரோட்டி ரவை – கால் கப்
செய்யும் முறை : மைதா மற்றும் சீரோட்டி ரவைக்கு உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசையும் அளவில் பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒன்றிரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் பிசையவும். பூர்ணம் தயாரித்து கொள்ளவும். வறுத்த கச கச வுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் போட்டு ருப்பவும்.அதில் வெல்லத்தை கலந்து வடிகட்டவும். இத்துடன் ருப்பிவைத்த கலவை பால் மற்றும் சற்று நீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இப்போது தேங்காய் பால் ரெடி. முன்னரே பிசைந்து வைத்திருந்த மாவில் பூரிகள் தரட்டி அதை எண்ணையில் சுட்டு பின் உடனே தேங்காய் பாலில் நனைத்து உடனே எடுத்து கொடுத்தால் உண்பவர் முகத்தில் சந்தோஷத்தையும் இப்படியும் ஒரு போளியா என வியப்பதையும் பார்க்காலாம்.