தேசிய கல்வி கொள்கை விவாதிக்க தயார்

பெங்களூரு, செப். 15- தேசிய புதிய கல்வி கொள்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க அரசு தயாராய் உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார் . பொறியாளர்களின் தினமான இன்று நகரின் கே ஆர் சர்க்கிளின் அருகில் உள்ள பாரத ரத்னா சர் எம் விஸ்வேஸ்வரய்யா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் முதல்வர் பேசுகையில் தற்போதய காலத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கு நல்ல கல்வியை கொடுத்து ஒரு உன்னத எதிர்காலத்தை அளிக்கும் நல்ல நோக்குடன் இந்த புதிய கல்வி முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கைகளில் கல்வித்துறையில் புரட்சிகரமான மாறுதல்கள் தரும் அம்சங்களும் உள்ளன. என்றார். புதிய கல்வி கொள்கைகள் குறித்து அனைத்து இடங்களிலும் விவாதம் மற்றும் சர்ச்சைகள் நடத்தி அனைவரின் அபிப்ராயங்களை கேட்டறிந்தே தேசிய புதிய கல்வி கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த புதிய கல்வி கொள்கையின் நல்ல அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியவைக்கும் பணியை அரசு செய்ய உள்ளது. என்றும் முதல்வர் தெரிவித்தார். தேசிய புதிய கல்வி கொள்கைகளை பட்டம் மற்றும் முதுநிலை கல்வி முறைகளில் நடைமுறை படுத்தப்படும். ஆரம்ப மற்றும் உயர்நிலை வகுப்பு அளவில் இந்த புதிய கொள்கைகளை இன்னும் நடைமுறை படுத்தவில்லை. இது குறித்து நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி அளவில் எந்த விதத்தில் புதிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அறிக்கை அளிக்கும். என முதல்வர் தெரிவித்தார். இந்த புதிய கல்வி கொள்கைகளின் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதனால் யாரும் ஆதங்க பட தேவையில்லை. அனைவருடனும் திறந்த மனதுடன் ஆலோசனை நடத்திய பின்னர்தான் அரசு இந்த புதிய கல்வி முறையை நடைமுறைப்படுத்தும். எனவே கவலைவேண்டாம் என்றார். பெங்களூருவில் சாட்டிலைட் நகர திட்டப்பணிகளில் குறைபாடுகள் இருப்பது குறித்து வரும் செய்திகளை கவனித்துள்ளேன். இது குறித்து விரிவான அறிக்கை தருமாறு மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நாட்டின் ஆதாரங்கள் . உழைக்கும் வர்க்கமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களே நாட்டை உருவாக்குபவர்கள். இவர்கள் நாட்டின் ஆதார தூண்கள் . எவரெல்லாம் கைகளால் பணியாற்றுகின்றாரோ அவர்களே நாட்டை உருவாக்குபவர்கள். நிலத்தில் விவசாயி மற்றும் தொழிலாளி நாட்டை உருவாக்குபவர்கள். இவர்களுக்குள் உள்ள முக்கோணத்திற்குள் மற்ற உழைக்கும் வர்க்கங்கள் உள்ளன. இந்த உழைக்கும் வர்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகாரிக்க்கும் . அதே போல் உழைக்கும் வர்கத்தினரே நாட்டின் மூல புருஷர்களாவர் . பாரத ரத்னா சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை , ஆட்சி , நேர்மை அனைவருக்கும் ஒரு முன் மாதிரி. இன்று விஸ்வேஸ்வரய்யாவின் சிலைக்கு சந்தன் என்ற ஐ டி ஐ பதவி பெற்றவரால் மாலை போட செய்துள்ளோம் . இதன் வாயிலாக அவருக்கு உண்மையான மரியாதையை செய்துள்ளோம். கே ஆர் சரக்கிளை அழகு படுத்தி இங்கு விஸ்வேஸ்வரய்யாவின் சிலை அருகில் யார் வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்து பார்க்கும் வசதியை மாநகராட்சி செய்துள்ளது. அதே போல் அவரின் வாழக்கை வரலாற்றை தெரிவிக்கும் பணியையும் ஒரு சிறிய நூலகம் அமைத்ததன் வாயிலாக செய்யப்பட்டுள்ளது. என முதல்வர் கூறினார். இதே நேரத்தில் முதல்வர் நகரின் கே ஆர் சர்க்கிளில் கர்நாடக பொறியாளர்கள் சேவை சங்கம் அமைத்துள்ள பொறியாளர்கள் பயிற்சி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த சமயத்தில் மாநில பொது பணித்துறை அமைச்சர் சி சி பாட்டில் , நீர் வள துறை அமைச்சர் கோவிந்த காரஜோல , நகர மாவட்ட அதிகாரி மஞ்சுநாத் , மாநகராட்சி ஆணையர் கௌரவ குப்தா மற்றும் பொறியாளர்கள் சங்க தலைவர் பீதாம்பரஸ்வாமி ஆகியோர் உடன் இருந்தனர்.