தேசிய திரைப்பட விருது பெற்றோருக்கு வர்த்தக துறை கௌரவிப்பு

பெங்களூர்: ஜூலை. 25 – 68வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னடத்தின் புகழ்க்கொடியை தூக்கி பிடித்துள்ள திரைப்படங்களுக்கு வர்த்தக சபை சார்பில் நகரில் கௌரவிக்கப்பட்டனர். தொள்ளு கன்னட திரைப்பட தயாரிப்பாளரான பவன் ஓடேயார் மற்றும் அபேக்ஷய புரோஹித் தம்பதி , திரைப்பட இயக்குனர் சாகர் புராணிக் மற்றும் தலே தண்டா திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஹேமமாலினி க்ருபாகர் உட்பட இந்த ஆண்டு விருதுகள் பெற்றவர்களை வர்த்தக சபை கௌரவித்தது. வர்த்தக சபையின் தலைவர் பா மா ஹரீஷ் இவர்களை கௌரவித்து கன்னட திரைப்படங்கள் எதிர்காலத்தில் நல்ல சாதனைகளை செய்வதன் வாயிலாக உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் கன்னட புகழை தூக்கி பிடித்து சாதிக்க முடியும் என பாராட்டினார். இதே வேளையில் வர்த்தக சங்க முன்னாள் பிரமகர்கள் எஸ் ஏ சன்னே கௌடா , வாரியத்தின் பிரமுகர்களான ஜெய் ஜெகதீஷ் , உட்பட பலரும் கலந்து கொண்டனர். மிகவும் வித்யாசமான கதையம்சம் கொண்ட தொள்ளு சினிமாவிற்கு மிகசிறந்த கன்னட பிராந்திய படம் மற்றும் சிங்க் ஒலிப்பதிவில் தேசிய விருது பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. மற்றும் தலை தண்டா திரைப்படத்திற்கு மிக சிறந்த சுற்ற சூழல் விழிப்புணர்வு உள்ள படமாக தேர்வாகியிருப்பதுடன் மிக சிறந்த கலை மற்றும் பாரம்பரிய சினிமா பிரிவில் கிரிஷ் காசரவல்லி இயக்கியுள்ள நாத நவனீத்தா திரைப்படம் தேர்வாகியிருப்பது கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயமாகும்.