தேசிய விளையாட்டு போட்டி: பிரதமர் தொடங்கி வைத்தார்

பனாஜி: அக்டோபர் . 26 -37-வது தேசிய விளையாட்டுப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா மாநிலம் பனாஜியில் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதுகுறித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கோவா மாநிலத்தில் முதன்முதலாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியை வியாழக்கிழமை (இன்று) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. வீரர், வீராங்கனைகளுக்கான விளையாட்டு கிராமம் மிகச் சிறப்பான முறையில் தயாராகியுள்ளது.
நவம்பர் 9-ம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
சைக்கிள் பந்தயம், கோல்ஃப் விளையாட்டுகள் மட்டும் டெல்லியில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.