தேஜஸ்வி யாதவுடன் ஒரே விமானத்தில் நிதீஷ் குமார் பயணம்

பாட்னா: ஜூன் 5:
லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உதவியுடன் பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று உள்ளது. இந்நிலையில் தான் காலையிலேயே நிதிஷ் குமார் தொடர்பான செய்திகள் பாஜகவினரை டென்ஷனாக்கி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்றைய தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கு தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மட்டுமே உள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் 32 தொகுதிகளில் பாஜக குறைவாக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திராவில் 16 தொகுதிகளிலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 சீட், கர்நாடகாவில் ஜேடிஎஸ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் தலா 2 இடங்கள் உள்பட மேலும் சில கட்சிகளும் வென்றுள்ளன.
அதன்பிறகு அவர்களின் கூட்டணி முறிந்தது. அதாவது கடந்த ஆண்டு பாஜகவுக்கு எதிராக ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதில் நிதிஷ் குமார் தான் முக்கிய பங்கு வகித்தார். அதன்பிறகு திடீரென்று நிதிஷ் குமார் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் பீகாரில் காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார். இதனால் தற்போதும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நிதிஷ் குமார் கூட்டணியை முறிப்பதில் வல்லவர். கடந்த 4 ஆண்டில் மட்டும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி அதன்பிறகு இப்போது பாஜக கூட்டணி என மாறி மாறி முதல்வர் பதவியில் உள்ளார். இதற்கிடையே தான் ‛இந்தியா’ கூட்டணி தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி ‛இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் அவர் முன்னாள் பார்ட்டனரான ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவுடன் ஒரே விமானத்தில் டெல்லி செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.